இந்திய அணியில் எந்த வீரரும் செய்யாத மிகப் பெரிய சாதனை படைத்த தமிழக வீரர்... வைரலாகும் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் பந்தில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் படைத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்கா அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் இரு அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. அதன் படி முதல் இன்னிங்ஸில் ஆடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 502 ஓட்டங்கள் குவித்து டிக்ளர் செய்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸ் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி இரண்டாம் நாள்(இன்று) ஆட்ட நேர முடிவில், 3 விக்கெட் இழப்பிற்கு 39 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.

இதில் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். குறிப்பாக அஸ்வின் மார்க்ரமை தன்னுடைய அருமையான பந்து வீச்சில் கிளீன் பவுல்டு ஆக, டி புருய்ன் சஹாவிடம் கேட்ச் ஆகி அஸ்வினிடம் வெளியேறினார்.

இந்த விக்கெட் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் புதிய பந்தில் எடுத்த 71-வது விக்கெட்டாகும். அஸ்வின் 2011-ல் டெஸ்ட் அறிமுகம் அடைந்ததிலிருந்து 71 விக்கெட்டுகளை இதுவரை முதல் பந்தில் கைப்பற்றியுள்ளார்.

முதலிடத்தில் இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராட் முதல் புதிய பந்தில் 107 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.

இரண்டாவது இடத்தில் வேகப்பந்து வீச்சாளரான ஜேம்ஸ் ஆண்டர்சன் 106 விக்கெட்டுகளுடனும், மூன்றாம் இடத்தில் தென் ஆப்பிரிக்காவின் பிலாண்டர் 76 விக்கெட்டுகளையும் நியூசிலாந்தின் ட்ரெண்ட் போல்ட் 75 விக்கெட்டுகளுடனும் இருக்கின்றனர்.

அதற்கு அடுத்த படியாக் இந்த பட்டியலில் அஸ்வின் 71 விக்கெட்டுகள் எடுத்து இணைந்துள்ளார்.

இது இதுவரை எந்த இந்திய பந்துவீச்சாளரும் செய்யாத சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி அஸ்வின் மார்க்ரமை அற்புதமாக போல்டாக்கிய் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்