தென் ஆப்பிரிக்கா வீரரை சொல்லி வைத்து தூக்கிய கோஹ்லி-இஷாந்த் சர்மா...வெளியான வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்கா அணியின் துடுப்பாட்ட வீரரை எப்படி அவுட்டாக்க வேண்டும் என்று கோஹ்லி சொல்லி கொடுத்த நிலையில், அதே போன்று இஷாந்த் சர்மா பந்து வீசி அவுட்டாக்கிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.

அதில் முதல் இன்னிங்ஸில் ஆடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 502 ஓட்டங்கள் எடுத்த நிலையில் டிக்ளர் செய்தது, அதன் பின் முதல் இன்னிங்ஸ் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 385 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.

இந்நிலையில் இப்போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியின் முக்கிய வீரராக பார்க்கப்படும், டெம்பா பவுமா 18 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தாலும், இவர் இந்திய அணியின் பந்து வீச்சை எளிதாக சமாளித்து கொண்டிருந்தார்.

View this post on Instagram

Ishant Sharma & Kohli 🔥

A post shared by cricket.heaven.2 (@cricket.heaven.2) on

இதனால் கோஹ்லி, இஷாந்த் சர்மாவை அழைத்து பந்து வீசும் படி கூறினார். அப்போது அவருடைய ஓவரையும், அவர் எளிதாக தடுத்து ஆட, உடனே கோஹ்லி, இஷாந்திடம் வந்து பந்து இப்படி வீசு, கண்டிப்பாக விக்கெட் விழும் என்று கூற, அதே போன்று இஷாந்த் வீசி, டெம்பா பவுமா 18 ஓட்டங்களில் எல்.பி.டபில்யூ ஆக்கி வெளியேற்றினார்.

அப்போது வர்ணனையாளர்கள் கோஹ்லி கொடுத்து அறிவுரை தான் இந்த விக்கெட்டிற்கு காரணம் என்று அவரை பாராட்டினர். அதுமட்டுமின்றி விக்கெட் விழுந்தவுடன் கோஹ்லி, சொன்னேனா என்பது போல் இஷாந்திடம் கையை மேலே உயர்த்தி காட்டினார்.

அந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்