பந்தை அடித்துவிட்டு பாதையில் நின்ற இலங்கை வீராங்கனை.. ரன்-அவுட் ஆன வீடியோ!

Report Print Kabilan in கிரிக்கெட்

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில், இலங்கை அணி வீராங்கனை ஒருவர் பந்தை இரண்டாவது ரன்னுக்கு ஓடாமல் நின்றதால் ரன்-அவுட் ஆனார்.

மகளிர் இலங்கை-அவுஸ்திரேலியா அணிகளுக்கு முதல் ஒருநாள் போட்டி பிரிஸ்பேனில் நடந்தது. இந்தப் போட்டியில் முதலில் ஆடிய அவுஸ்திரேலியா 8 விக்கெட் இழப்புக்கு 281 ஓட்டங்கள் சேர்த்தது. அதிகபட்சமாக லன்னிங் 73 ஓட்டங்களும், மூனி 66 ஓட்டங்களும் விளாசினர்.

பின்னர் ஆடிய இலங்கை அணி 41.3 ஓவர்களில் 124 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் 157 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.

முன்னதாக, இலங்கை அணி துடுப்பாட்டம் செய்துகொண்டிருந்தபோது, ஒஷாடி ரணசிங்கே பந்தை லெக் திசையில் அடித்தார். அவர் ஒரு ரன்னுக்காக ஓடிவிட்டு, இரண்டாவது ரன்னுக்கு ஓடாமல் பாதியில் நின்றார்.

இதனை கவனிக்காத மற்றொரு இலங்கை வீராங்கனை ஷசிகலா சிறிவர்தனே, வேகமாக மறுமுனைக்கு 2வது ரன் எடுக்க ஓடி வந்துவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, அவுஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலிசா ஹீலி இலங்கை வீராங்கனை ஒஷாடியை ரன்-அவுட் செய்தார். இதனால் ஏமாற்றத்துடன் ஒஷாடி மைதானத்தை விட்டு வெளியேறினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்