புஜாராவை கெட்ட வார்த்தையால் திட்டிய ரோஹித்? சர்ச்சை வீடியோ!

Report Print Kabilan in கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய வீரர் புஜாராவை தொடக்க வீரர் ரோஹித் ஷர்மா கெட்ட வார்த்தையில் திட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று நடந்தது.

இந்திய அணி இன்று இரண்டாவது இன்னிங்சை ஆடியது. மயங்க் அகர்வால் 7 ஓட்டங்களில் அவுட் ஆன நிலையில், ரோஹித்-புஜாரா கூட்டணி 169 ஓட்டங்கள் குவித்தது.

இந்த இன்னிங்சின் 26வது ஓவரில் ரோஹித் ஒரு ரன் அடித்துவிட்டு, புஜாராவை ஓடிவர எதிர்பார்த்தார். ஆனால், புஜாரா ரன்னுக்காக ஓடி வரவில்லை.

இதனால் கோபமடைந்த ரோஹித் ஷர்மா, எதிர்முனையில் இருந்த புஜாராவை ஹிந்தி மொழியில் கெட்ட வார்த்தையில் திட்டினார்.

இது அங்கிருந்த ஸ்டம்ப் மைக்கில் பதிவானது. அவர் கூறிய வார்த்தை இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸின் பெயரை உச்சரிப்பது போன்றதாகும்.

கோஹ்லி மட்டும் எப்போதும் இந்திய அணியில் ஆக்ரோஷமாக இருப்பார். ஆனால் தற்போது ரோஹித் ஷர்மாவும் மைதானத்தில் கோபத்தை காட்டியிருக்கிறார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில், இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘உங்களுக்கு தெரியுமா.. இந்த முறை என் பெயரைக் கூறியது கோஹ்லி இல்லை ரோஹித்’ என கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்