மைதானத்தில் இலங்கை வீரர்களை நெகிழ வைத்த பாகிஸ்தான் ரசிகர்கள்!

Report Print Vijay Amburore in கிரிக்கெட்

பாகிஸ்தான் அணிக்கெதிரான முதல் டி 20 போட்டியில் இலங்கை அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது.

பாகிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி தற்போது 3 போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாடி வருகிறது.

லாகூரில் இன்று நடைபெற்ற முதல் 20 ஓவர் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து 165 ரன்களை குவித்தது.

அணியில் அதிகபட்சமாக தனுஷ்க குணதிலகா 57 ஓட்டங்களை பெற்றிருந்தார். பாகிஸ்தான் அணி சார்பில், முகமது ஹஸ்னைன் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார்.

இதனையடுத்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.

இதனால் அந்த அணி 101 ரன்கள் எடுத்திருந்த போதே அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து தோல்வியடைந்தது. இலங்கை அணி சார்பில் நுவான் பிரதீப் மற்றும் இசுரு உதனா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தனர்.

போட்டியின் போது, பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை வீரர்களுக்கு, அந்த நாட்டை சேர்ந்த ரசிகர்கள் மைதானத்தில் பதாகைகளை ஏந்தி நன்றி தெரிவித்தனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்