இலங்கைக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வீரர் உலக சாதனை!

Report Print Kabilan in கிரிக்கெட்

இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில், பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஹஸ்னைன் உலக சாதனை படைத்துள்ளார்.

லாகூரில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில், இலங்கை அணி 64 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முதலில் ஆடிய இலங்கை அணி, 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 165 ஓட்டங்கள் சேர்த்தது. அதிகபட்சமாக குணதிலகா 57 ஓட்டங்கள் விளாசினார்.

பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணியில் அனைத்து வீரர்களும் சொற்ப ஓட்டங்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் அந்த அணி 17.4 ஓவரில் 101 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஹஸ்னைன் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம் மிகக் குறைந்த வயதில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.

இதற்கு முன்பு, ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் 20வது வயதில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியிருந்தார். அந்த சாதனையை 19வது வயதிலேயே ஹஸ்னைன் முறியடித்துள்ளார்.

Getty Images

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers