ஸ்டெம்ப்பை தெறிக்கவிட்டு தென் ஆப்பிரிக்கா வீரரை கீழே விழ வைத்த ஷமி! மிரண்டு போய் நின்ற டூபிளிசிஸ் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்கா அணியின் முக்கிய மூன்று விக்கெட்டுகளின் ஸ்டெம்புகளை தெறிக்கவிட்ட இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஷமியின் வீடியோ வெளியாகியுள்ளது.

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் முதல் இன்னிங்ஸில் ஆடிய இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 502 ஓட்டங்கள் எடுத்து டிக்ளர் செய்தது, அதன் பின் முதல் இன்னிங்ஸ் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 431 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து விட, 71 ஓட்டங்கள் முன்னிலையுடன் இந்திய அணி இரண்டாவது இன்னிங்ஸை துவங்கியது.

அதன் படி இந்திய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட் இழப்பிற்கு 323 ஓட்டங்கள் குவித்து டிக்ளர் செய்ததால், தென் ஆப்பிரிக்கா அணியின் வெற்றிக்கு 395 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், தென் ஆப்பிரிக்கா அணி திணறி வருகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஷமி தன்னுடைய அற்புதமான பந்து வீச்சாள், தென் ஆப்பிரிக்கா அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களான டெம்பா பாவுவா(0), தலைவர் பாப் டூ பிளசிஸ்(13) மற்றும் டி காக்(0) ஆகியோரை அடுத்தடுத்து வந்த வேகத்தில் போல்டாக்கி அனுப்பி வைத்தார்.

இதில் டெம்பா பாவுவா ஷமியின் பந்து வீச்சை தடுக்க முடியாமல், போல்டாகி கீழே விழுந்த வீடியோவை இந்திய ரசிர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்