ஷமியின் அசுரவேகம்.. ஜடேஜாவின் மாயாஜால சுழல்.. மரண அடி வாங்கிய தென் ஆப்பிரிக்கா!

Report Print Kabilan in கிரிக்கெட்

விசாகப்பட்டினத்தில் நடந்த டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 203 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்தது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணி, முதல் இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 502 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 215 ஓட்டங்களும், ரோஹித் ஷர்மா 176 ஓட்டங்களும் விளாசினர். பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 431 ஓட்டங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக எல்கர் 160 ஓட்டங்களும், டி காக் 111 ஓட்டங்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 7 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அதனைத் தொடர்ந்து 71 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, 4 விக்கெட் இழப்புக்கு 323 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன்மூலம் 394 ஓட்டங்கள் வெற்றி இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியது.

BCCI

தொடக்க வீரர் எல்கரின்(2) விக்கெட்டை ஜடேஜா வீழ்த்திய நிலையில், இரண்டாவது விக்கெட்டை அஸ்வின் கைப்பற்றினார். அதன் பின்னர் களமிறங்கிய பவுமா, டூ பிளீசிஸ், டி காக் ஆகியோர் ஷமியின் வேகத்தில் வீழ்ந்தனர்.

மற்றொரு தொடக்க வீரர் மார்க்ரம் (39) 6வது விக்கெட்டாக ஜடேஜா பந்துவீச்சில் அவுட் ஆனார். அடுத்து பிளாந்தர், மகாராஜ் ஆகியோரையும் ஜடேஜா தனது சுழலில் வீழ்த்தினார். ஆனால், கடைசி கட்டத்தில் செனுரன் முத்துச்சாமி மற்றும் டேன் பைட் இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இவர்களது கூட்டணி 9வது விக்கெட்டுக்கு 91 ஓட்டங்கள் சேர்த்தது.

BCCI

பின்னர் தென் ஆப்பிரிக்க அணியின் கடைசி இரண்டு விக்கெட்டுகளை ஷமி கைப்பற்றினார். இதனால் அந்த அணி 191 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக டேன் பைட் 56 ஓட்டங்களும், செனுரன் 49 ஓட்டங்களும் எடுத்தனர்.

இந்திய அணி தரப்பில் ஷமி 5 விக்கெட்டுகளும், ஜடேஜா 4 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

BCCI

BCCI

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers