அஸ்வின்-ஷமி மிரட்டிவிட்டனர்! விராட் கோஹ்லி

Report Print Kabilan in கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் வெற்றி பெற்றது குறித்து பேசிய கோஹ்லி, பந்துவீச்சில் அஸ்வின், ஷமி, ஜடேஜா ஆகியோர் மிரட்டிவிட்டதாக குறிப்பிட்டார்.

விசாகப்பட்டினத்தில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 203 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் அபார பந்துவீச்சினால், தென் ஆப்பிரிக்க அணி கடைசி நாள் ஆட்டத்தில் 191 ஓட்டங்களுக்கு சுருண்டது.

இந்நிலையில், வெற்றி குறித்து இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி கூறுகையில், ‘இவை அனைத்திற்கும் காரணம் அணுகுமுறை தான். வேகப்பந்து வீச்சாளர்கள் எல்லாம் சுழற்பந்துவீச்சாளர்கள் சிறப்பாக வேலையை செய்து முடிப்பார்கள் என்று நினைத்தால், அது அவர்களின் இடத்தை நியாயப்படுத்தாது.

அவர்களும் நூறு சதவித உழைப்பை தரவேண்டியுள்ளது. ஷமி இரண்டாவது இன்னிங்சில் ஸ்ட்ரைக் பந்துவீச்சாளராக இருந்துள்ளார். எல்லோரும் தங்களது பலத்தில் இருந்தனர். மயங்க் மற்றும் ரோஹித் அற்புதமாக விளையாடினர்.

புஜாரா இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக விளையாடினார். ஜடேஜா மற்றும் அஸ்வின் மீண்டும் மிரட்டிவிட்டனர். 5வது நாளில் ஷமியின் பந்துவீச்சு அற்புதமாக அமைந்தது’ என தெரிவித்துள்ளார்.

Arjun Singh / SPORTZPICS for BCCI

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers