இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே.. ரகசியம் உடைத்த சாதனை வீரர் ரோஹித் ஷர்மா!

Report Print Kabilan in கிரிக்கெட்

டெஸ்ட் போட்டியில் துவக்க வீரராக தன்னை களமிறக்க போவதாக 2 ஆண்டுகளுக்கு முன்பே கூறினார்கள் என்று இந்திய வீரர் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி 203 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் முதல் முறையாக தொடக்க வீரராக களமிறங்கிய ரோஹித் ஷர்மா, இரண்டு இன்னிங்சிலும் சதம் விளாசி சாதனை படைத்தார்.

ஆனால், இதற்கு முன்பு நடுவரிசையில் களமிறங்கி விளையாடிய அவரால் சரியாக ஓட்டங்கள் குவிக்க முடியவில்லை. அதனால் அவர் பார்மில் இல்லை என்று கூறி ஓரங்கட்டப்பட்டார்.

இந்நிலையில், பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ரோஹித் ஷர்மா, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தன்னை டெஸ்டில் தொடக்க வீரராக களமிறக்குவதாக கூறினார்கள் என்றும், அதற்காக தயாராக இருந்ததாகவும் தெரிவித்தார்.

Arjun Singh / Sportzpics

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், ‘மேற்கிந்திய தீவுகள் தொடர் நடைபெற்று கொண்டிருக்கும்போது, நான் தொடக்க வீரராக களம் இறக்கப்படுவேன் என்று கூறப்பட்டது. அதற்காக நான் இரண்டு ஆண்டுகள் தயாராக இருந்தேன்.

ஒரு கட்டத்தில், நான் தொடக்க வீரராக களம் இறக்கப்படுவேன் என்பதை அறிந்திருந்தேன். ஆகவே நான் தயாராக இருந்தேன். வலைப்பயிற்சியில் கூட நான் புதிய பந்தில் பயிற்சி எடுத்து வந்தேன்.

அதனால் இது எனக்கு ஆச்சரியமாக இல்லை’ என தெரிவித்துள்ளார். இத்தனை நாட்கள் இதுகுறித்து பேசாமல் இருந்த ரோஹித், சதம் விளாசி தன்னை நிரூபித்த பின்னர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தொடக்க வீரராக தன்னை களமிறக்குவதாக கூறப்பட்ட ரகசியத்தை உடைத்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்