பாலிவுட் நடிகர்களுடன் இணைந்து கால்பந்து விளையாடிய டோனி! வீடியோ

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் டோனி, பாலிவுட் நடிகர்களுடன் இணைந்து கால்பந்து விளையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

விக்கெட் கீப்பர்-துடுப்பாட்ட வீரரான டோனி, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் இருந்து விலகிக்கொண்டு ராணுவ பயிற்சியில் இணைந்தார்.

அதனைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரிலும் விளையாடவில்லை. அடுத்ததாக வங்கதேசத்திற்கு எதிராக நடக்க உள்ள டி20 தொடரிலும் அவர் விளையாட மாட்டார் என்றும், டிசம்பர் மாதத்தில் நடக்கும் தேர்வுக்கு மட்டுமே வருவார் என்றும் தகவல்கள் பரவின.

இந்நிலையில், மும்பையில் பாலிவுட் நடிகர் அர்ஜுன் கபூர் உட்பட சின்னத்திரை நட்சத்திரங்களுடன் இணைந்து, சமீபத்தில் டோனி கால்பந்து விளையாடிய வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

டோனிக்கு பதிலாக ஒருநாள் போட்டிகளில் ரிஷாப் பண்ட் விக்கெட் பணியை செய்து வருகிறார். ஆனால் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில், விருத்திமன் சஹா விக்கெட் கீப்பராக செயல்பட்டார்.

இதற்கிடையில், டிசம்பர் மாதம் நடைபெற உள்ள மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரில் டோனி களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்