தினேஷ் கார்த்திக் தலைமையில் மிரட்டலாக வெற்றி பெற்ற தமிழக அணி!

Report Print Kabilan in கிரிக்கெட்

ஜெய்ப்பூரில் நடைபெற்ற விஜய் ஹசாரே தொடரில், தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணி 187 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரிபுரா அணியை வீழ்த்தியது.

விஜய் ஹசாரே கிண்ண தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் 4 பிரிவுகளில் 38 அணிகள் விளையாடி வருகின்றன.

இந்நிலையில், ‘சி’ பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழக அணி, நேற்று தனது 6வது லீக் போட்டியில் திரிபுரா அணியை சந்தித்து.

இப்போட்டியில் முதலில் ஆடிய தமிழக அணி, அபினவ் முகுந்த்(84) மற்றும் பாபா அபராஜித்(87) ஆகியோரின் அரைசதத்தின் உதவியால் 8 விக்கெட் இழப்புக்கு 315 ஓட்டங்கள் குவித்தது. அணித்தலைவர் தினேஷ் கார்த்திக் 40 ஓட்டங்கள் எடுத்தார்.

பின்னர் ஆடிய திரிபுரா அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. தமிழக அணியின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், திரிபுரா 34.2 ஓவரில் 128 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதன்மூலம் தமிழக அணி 187 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

தமிழக அணி தரப்பில் நடராஜன் 3 விக்கெட்டுகளும், முருகன் அஸ்வின் மற்றும் சாய் கிஷோர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

PTI Photo

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்