பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இலங்கை அணி!

Report Print Vijay Amburore in கிரிக்கெட்

பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது டி 20 போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இலங்கை அணி தொடரை கைப்பற்றியுள்ளது.

பாகிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாடி வருகிறது.

இதில் நடந்து முடிந்த முதல் போட்டியில் இலங்கை அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதனையடுத்து இன்று நடைபெற்ற இரண்டாவது இருவது ஓவர் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி வீரர்கள் அதிரடியாக விளையாடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்களை குவிந்திருந்தனர்.

அந்த அணியில் அதிகபட்சமாக பானுகா ராஜபக்ஷ 48 பந்துகளில் 77 ரன்களை எடுத்திருந்தார்.

இதனையடுத்து 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற கடினமான இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர்கள், இலங்கை அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணற ஆரம்பித்தனர்.

ஒரு புறம் விக்கெட்டுகள் சரிந்துகொண்டே இருக்க, அணிக்கு ஆறுதலாக இமாத் வாசிம் மட்டும் 29 பந்துகளில் 47 ரன்களை குவித்திருந்தார்.

ஆட்ட நேர இறுதியில் பாகிஸ்தான் அணி 147 ரன்கள் மட்டுமே குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து தோல்வியடைந்தது. இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக நுவான் பிரதீப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

இதன்மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி 2-0 என்கிற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்