வெளிநாட்டு மண்ணில் எதிரணியை வீழ்த்தி வரலாற்று சாதனை படைத்த இலங்கை அணி! குவியும் பாராட்டுகள்

Report Print Raju Raju in கிரிக்கெட்

பாகிஸ்தானுக்கு எதிரான டி20 தொடரை இலங்கை அணி வென்ற நிலையில் பல்வேறு வீரர்கள் இலங்கை அணி வீரர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தானிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி 20 தொடரில் விளையாடி வருகிறது.

இதில் நடந்து முடிந்த முதல் போட்டியில் இலங்கை அணி 64 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதையடுத்து நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியிலும் இலங்கை அணி 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிப்பதோடு தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.

இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் அணிகள் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள பாகிஸ்தானை வீழ்த்தி இலங்கை அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

மேலும் பாகிஸ்தானுக்கு எதிராக முதல்முறையாக டி20 தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.

இதையடுத்து இலங்கை அணிக்கு பல்வேறு வீரர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

திமுத் கருணரத்னே தனது டுவிட்டர் பதிவில், தஷுன் ஷனகாவுக்கு வாழ்த்துக்கள், அணியை அருமையாக வழிநடத்தி சென்றீர்கள், இலங்கை அணி ஜெயிப்பது தொடரட்டும் என பதிவிட்டுள்ளார்.

ருசல் அர்னால்ட் தனது பதிவில், ஒட்டுமொத்த அணியாக இலங்கையின் செயல்பாடு அருமையாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இதே போல பல்வேறு வீரர்களும், கிரிக்கெட் விமர்சகர்களும் இலங்கை அணிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்