ஒரே போட்டியில் சரசரவென முன்னேறிய ரோஹித்-அஸ்வின்.. சறுக்கிய கோஹ்லி!

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி முடிந்த நிலையில், ஐ.சி.சி டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசை வெளியாகியுள்ளது.

இதில் இந்திய அணி வீரர்கள் பலர் சிறப்பாக ஆடியதால் பல இடங்கள் முன்னேறியுள்ளனர். தமிழக வீரரான அஸ்வின், நீண்ட இடைவெளிக்கு பின் 10 இடங்களுக்குள் நுழைந்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் விரைவாக 350 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் வரிசையில், முத்தையா முரளிதரனுடன் அவர் முதல் இடத்தை பகிர்ந்துள்ளார்.

அத்துடன் 14வது இடத்தில் இருந்து 10வது இடத்தைப் பிடித்துள்ளார். மேலும், டெஸ்ட் ஆல்-ரவுண்டர் தரவரிசையில் முதல் ஐந்து இடங்களுக்குள் மீண்டும் வந்துள்ளார்.

இதேபோல் முதல் முறையாக டெஸ்டில் தொடக்க வீரராக களமிறங்கி, இரண்டு இன்னிங்சிலும் சதம் விளாசிய ரோஹித் ஷர்மா, ஒரே டெஸ்டில் அதிக சிக்சர்கள் அடித்தும் சாதனை படைத்தார். இந்நிலையில், டெஸ்ட் தரவரிசையில் பல இடங்கள் அவர் முன்னேறியுள்ளார். அவர் 36 இடங்கள் முன்னேறி 17வது இடத்தைப் பெற்றுள்ளார்.

தன் முதல் டெஸ்ட் சதத்தை இரட்டை சதமாக மாற்றிய மயங்க் அகர்வால், 38 இடங்கள் முன்னேறி 25வது இடத்தை பிடித்துள்ளார். ஜடேஜா ஆல்-ரவுண்டர் தரவரிசையில் 2ஆம் இடம் பிடித்துள்ள நிலையில், விராட் கோஹ்லி பெருமளவு புள்ளிகள் சறுக்கியுள்ளார்.

தற்போது டெஸ்ட் தரவரிசையில் 2வது இடத்தில் இருக்கும் விராட் கோஹ்லி, 38 புள்ளிகள் சரிந்துள்ளார். எனினும் அவர் இரண்டாவது இடத்திலேயே தொடர்கிறார்.

BCCI

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்