கிரிக்கெட் போட்டியின் போது மைதானத்திலேயே உயிரிழந்த நடுவர்! வெளியான அவர் புகைப்படம்

Report Print Raju Raju in கிரிக்கெட்

கிரிக்கெட் போட்டி நடைபெற்று கொண்டிருந்த போது மைதானத்தில் மாரடைப்பால் நடுவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கராச்சியில் உள்ள டிஎம்சி மைதானத்தில் நேற்று கிளப் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

அப்போது போட்டியின் நடுவராக நசீம் ஷேக் (52) என்பவர் செயல்பட்டார். அந்த சமயத்தில் நசீம் திடீரென மைதானத்தில் சுருண்டு விழுந்தார்.

உடனடியாக அவரை ஆம்புலன்ஸில் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்த நிலையில் மாரடைப்பால் உயிரிழந்தது தெரியவந்தது.

இதனிடையில் நசீம் ஏற்கனவே இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தார் என கூறப்பட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers