உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை.. இலங்கை அணி எந்த இடத்தில்?

Report Print Kabilan in கிரிக்கெட்

தற்போது நடைபெற்று வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில், புள்ளிகள் அடிப்படையில் இலங்கை அணி 3வது இடத்தைப் பிடித்துள்ளது.

விசாகப்பட்டினத்தில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடந்தது. இந்தப் போட்டியில், இந்திய அணி 203 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அபாரமாக விளையாடிய ரோஹித் ஷர்மா, இரண்டு இன்னிங்சிலும் சதம் விளாசி அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் நிலையில், 40 புள்ளிகளையும் பெற்றுள்ளது.

இந்நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் இந்திய அணி 160 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

இந்த தொடரில் இதுவரை விளையாடிய 3 போட்டிகளிலும் இந்திய அணி வென்றுள்ளது. இரண்டாவது இடத்தில் நியூசிலாந்து அணி 60 புள்ளிகளுடன் உள்ளது.

நியூசிலாந்துக்கு அடுத்த இடத்தில் இலங்கை அணி உள்ளது. அந்த அணி 60 புள்ளிகளுடன் 3வது இடத்தைப் பிடித்துள்ளது. இலங்கைக்கு அடுத்த இடத்தில் அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் உள்ளன.

தென் ஆப்பிரிக்க அணிக்கு இந்த தொடரில் இந்தியாவுடன் விளையாடியது தான் முதல் போட்டியாகும். அதிலும் தோல்வியடைந்ததால் அந்த அணி இன்னும் புள்ளி கணக்கை தொடங்கவில்லை.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்