இந்திய வீரரின் ஹெல்மட்டில் குறி வைத்த தென் ஆப்பிரிக்கா வீரர்... அடுத்த பந்திலே சரியான பதிலடி கொடுத்த வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய வீரர் மயங்க் அக்ர்வாலின் ஹெல்மட்டில் பந்து பட்டதால், அவருக்கு சிறிய அளவிலான காயம் ஏற்பட்டுள்ளது.

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையே நடக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டி புனே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது, அதன் படி முதல் இன்னிங்ஸின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 273 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது.

இதில் முதல் போட்டியில் இரட்டை சதம் அடித்து மிரட்டிய மயங்க் அகர்வால், இந்த போட்டியில் சதம் அடித்து அசத்தினார்.

இந்நிலையில் இப்போட்டியின் 11 -வது ஓவரின் போது தென் ஆப்பிரிக்க வீரர் ஆன்ரிச் வீசிய பந்தை எதிர்கொண்ட மயங்க் அக்ர்வால் அதை தடுத்து ஆட முயற்சித்த போது பந்தானது அதிகவேகமாக அவரின் ஹெல்மெட்டில் பலமாக தாக்கியது.

இதனால் அவரின் தலையில் சிறுகாயம் ஏற்ப்பட்டது. உடனடியாக மைதானத்திலேயே அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் விளையாட ஆரம்பித்த அவர் அடுத்த பந்திலே பவுண்டரி அடித்து பதிலடி கொடுத்தார்.

இருப்பினும் அகர்வால் 108 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்