இலங்கையுடன் மோசமான தோல்வி... ஆத்திரத்தில் பாகிஸ்தான் வீரரின் பேனரை அடித்து உதைத்த ரசிகர் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

இலங்கை அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை பாகிஸ்தான் அணி முழுவதுமாக இழந்ததால், ஆத்திரமடைந்த பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் சர்பிராஸ் கானின் பேனரை அடித்து உடைத்த வீடியோ காட்சி வெளியாக வைரலாகி வருகிறது.

இலங்கை அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி கைப்பற்றிய நிலையில், இரு அணிகளுக்கிடையே டி20 தொடர் நடைபெற்று வந்தது.

டி20-யில் நம்பர் ஒன் அணியாக இருக்கும் பாகிஸ்தானை, இலங்கை அணி அதன் சொந்த மண்ணில் அடுத்தடுத்து என 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று 3-0 என்று பாகிஸ்தானை வொயிட் வாஷ் செய்ததால், அந்தநாட்டு ரசிகர்கள் மிகுந்த வேதனையடைந்தனர்.

ஒரு சிலர் கோபத்தில் பாகிஸ்தான் வீரர்களை திட்டி சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர். அதில் ஒருவர் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்று அங்கிருந்த சர்பிராஷ் கானின் பேனரை அடித்து உடைக்கிறார்.

அந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்