இலங்கை அணி வீரர்கள் பாகிஸ்தானில் எப்படி நடத்தப்பட்டனர்? வெளியான முக்கிய தகவல்

Report Print Santhan in கிரிக்கெட்

பாகிஸ்தான் சென்ற இலங்கை அணி நாடு திரும்பியுள்ள நிலையில், அவர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குறித்து புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை அணி சமீபத்தில் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடியது.

இதில் பாகிஸ்தான் அணி டெஸ்ட் தொடரை 2-0 எனவும், இலங்கை அணி டி20 தொடரை 3-0 எனவும் கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.

பாகிஸ்தான் செல்வதற்கு முன்பே சில சீனியர் இலங்கை வீரர்கள் பாதுகாப்பு காரணங்களால் பாகிஸ்தான் செல்லவில்லை, அதன் பின் பாகிஸ்தான் உச்சகட்ட பாதுகாப்பு கொடுக்கப்படும், வீரர்களுக்கு ஒன்றும் ஆகாது என்று உறுதியளித்த பின்னரே இலங்கை வீரர்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் தற்போது நாடு திரும்பியுள்ள இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் குறித்து புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கை வீரர்கள் பாகிஸ்தான் விமானநிலையத்தில் கால் பதித்ததில் இருந்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பாதுகாப்பு வீரர்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே இருந்தது.

எங்கு சென்றாலும், அது ஏன் சாலையில் சென்றால் கூட உச்சகட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டது. வீரர்கள் ஹோட்டல் அல்லது மைதானம் என இரு இடங்களில் மட்டுமே இருந்துள்ளனர். பாதுகாப்பு காரணங்களால் வெளியில் எங்கும் செல்ல அனுமதிக்கப்படவில்லை.

இதனால் இலங்கை வீரர்கள் இது குறித்து தான் புகார் அளித்துள்ளதாகவும், மீண்டும் இலங்கை அணி டிசம்பர் மாதம் டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் செல்லவுள்ளதால், இலங்கை கிரிக்கெட் வாரியம் இது குறித்து மறுபரிசீலனை செய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்