சாதனையை முறியடிக்க காத்திருக்கும் அஸ்வின்!

Report Print Kabilan in கிரிக்கெட்
305Shares

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை படைக்க, தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வினுக்கு இன்னும் 9 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது.

இந்திய கிரிக்கெட் அணியில், டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் அஸ்வின் 4வது இடத்தில் உள்ளார். கும்ப்ளே(619) முதலிடத்திலும், கபில்தேவ்(434), ஹர்பஜன் சிங்(417) ஆகியோர் இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளனர்.

தற்போது தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில், சிறப்பாக பந்துவீசிய அஸ்வின் 14 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.

புனே டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியபோது, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 50 விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் 4வது இடத்தைப் பிடித்தார். அவர் 9 டெஸ்ட்களில் 52 விக்கெட்டுகளை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக வீழ்த்தியுள்ளார்.

இந்நிலையில், அவர் மேலும் 9 விக்கெட்டுகள் வீழ்த்தும்பட்சத்தில் ஹர்பஜன் சிங்கை முந்துவார். ஹர்பஜன் 11 டெஸ்டில் 60 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

எனவே, தென் ஆப்பிரிக்காவுக்கான கடைசி டெஸ்டில் ஹர்பஜனின் சாதனையை அஸ்வின் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஸ்வின் இதுவரை 67 டெஸ்ட் போட்டிகளில் 356 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்