17 வயதில் மிரட்டலாக இரட்டைசதம்.. சாதனை படைத்த வீரர்!

Report Print Kabilan in கிரிக்கெட்
365Shares

விஜய் ஹசாரே டிராபி தொடரில் மும்பை அணி வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால், இளம் வயதில் இரட்டை சதம் அடித்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.

இந்தியாவில் நடைபெற்று வரும் விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடரின் இன்றைய ஆட்டத்தில், மும்பை-ஜார்கண்ட அணிகள் விளையாடி வருகின்றன. இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற மும்பை முதலில் துடுப்பாடியது.

தொடக்க வீரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மிரட்டலான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். பவுண்டரிகளும், சிக்சர்களுமாக விளாசிய அவர், 154 பந்துகளில் 203 ஓட்டங்கள் விளாசினார். இதில் 12 சிக்சர்கள், 17 பவுண்டரிகள் அடங்கும்.

இதன்மூலம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது, லிஸ்ட் ஏ (ஒருநாள் கிரிக்கெட்) போட்டியில் இளம் வயதில் இரட்டை சதம் விளாசிய வீரர் ஜெய்ஸ்வால் தான். அவர் தனது 17வது வயதில் இந்த சாதனையை செய்துள்ளார்.

இது அவர் அறிமுகமாகும் விஜய் ஹசாரே தொடர் ஆகும். இதுவரை இந்த தொடரில் 5 போட்டிகளில் விளையாடியுள்ள ஜெய்ஸ்வால், மூன்று சதங்கள் அடித்து 504 ஓட்டங்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்