உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டம் தொடங்கும் போது சூதாட்டத்தில் சிக்கிய 3 வீரர்கள்! யார் அவர்கள்?

Report Print Raju Raju in கிரிக்கெட்

சூதாட்ட சர்ச்சையில் சிக்கிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் அணித் தலைவர் உட்பட 3 வீரர்கள் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் ஆரம்பமாவுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தகுதி சுற்று ஆட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை தொடங்குகிறது.

இந்த போட்டியில் பங்கேற்கும் 14 அணிகளில் ஒன்றான ஐக்கிய அரபு அமீரகம் அணி சர்ச்சையில் சிக்கியுள்ளது.

அந்த அணியைச் சேர்ந்த தலைவர் முகமது நவீத், ஷாய்மன் அன்வர், கதீர் அகமது ஆகியோர் ஊழல் தடுப்பு விதியை மீறியதாக நேற்று அதிரடியாக இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

இவர்கள் உள்ளூர் வீரர் மெஹர்தீப் சயாகருடன் இணைந்து சூதாட்டத்தில் ஈடுபட முயற்சித்ததாக குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து முகமது நவீத்துக்கு பதிலாக அமீரக அணியின் தலைவர் வேகப்பந்து வீச்சாளர் அகமது ராசா நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்