ஜாம்பவான்களின் சாதனைகளை தகர்த்தெறிந்த கோஹ்லியின் அடுத்த இலக்கு இவர்தான்!

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3வது டெஸ்டில் சாதனை ஒன்றை முறியடிக்க உள்ளார்.

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. புனேவில் நடைபெற்ற 2வது டெஸ்டில் கோஹ்லி இரட்டை சதம் அடித்தார். இது அவருக்கு 7வது இரட்டை சதம் ஆகும்.

இதன்மூலம் அதிக இரட்டை சதங்கள் அடித்த சச்சின் டெண்டுல்கர்(6), வீரேந்திர சேவாக்(6) ஆகியோரின் சாதனையை முறியடித்தார். அத்துடன் சர்வதேச கிரிக்கெட்டில் அதிகமுறை 150 ஓட்டங்களுக்கு மேல் குவித்த அணித்தலைவர் என்ற டான் பிராட்மேனின் சாதனையையும்(8 முறை) முறியடித்தார்.

இந்நிலையில் நாளை ராஞ்சியில் துவங்கும் 3வது டெஸ்ட் போட்டியில், அவுஸ்திரேலிய முன்னாள் அணித்தலைவர் ரிக்கி பாண்டிங்கின் சாதனை ஒன்றையும் முறியடிக்க உள்ளார். அதாவது, டெஸ்டில் அதிக சதங்கள் அடித்த அணித்தலைவர்கள் பட்டியலில் ரிக்கி பாண்டிங்(19) இரண்டாவது இடத்தில் உள்ளார்.

கோஹ்லியும் 19 சதங்கள் அடித்துள்ளதால், 3வது டெஸ்டில் ஒரு சதம் அடிக்கும்பட்சத்தில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறுவார். இந்த பட்டியலில் தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் கிரேம் ஸ்மித் 25 சதங்களுடன் முதல் இடத்தில் உள்ளார். கோஹ்லி நாளை தொடங்கும் டெஸ்டில், ரிக்கி பாண்டிங்கின் சாதனையை முறியடிப்பாரா என அவரது ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

AFP

முன்னதாக, இரண்டாவது டெஸ்டின் வெற்றிக்கு பின் பேசிய கோஹ்லி, ‘அணியின் தலைவர் என்ற பொறுப்பின் அடிப்படையில் ஓட்டங்கள் குவித்தேன். எனது எண்ணம் எப்போதும் அணியின் ஸ்கோரை அதிகபட்சமாக உயர்த்த வேண்டும் என்றே இருக்கும்.

அடுத்த போட்டியிலும் நாங்கள் சிறு ஓய்வு எண்ணம் கூட இல்லாமல், இதற்கு முன்னர் விளையாடியது போன்றே சிறப்பாக விளையாடுவோம். 3-0 என்றா கணக்கில் தொடரை வெல்வோம் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் இருக்கிறோம். எனவே லேசாக விளையாட மாட்டோம் என்பதற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன்’ என தெரிவித்தார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்