மாறுபட்ட வழியில் யோசிக்கிறார்.. கோஹ்லி மிகச்சிறந்த தலைவர்! ஜாம்பவான் வீரர்

Report Print Kabilan in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி மிகச்சிறந்த தலைவர் என, மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் பிரையன் லாரா தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் வல்லுநர்கள் விராட் கோஹ்லியின் தலைமை குறித்து பாராட்டி வருகின்றனர். அவரது தலைமையில் இந்திய அணி கடந்த சில ஆண்டுகளில், 11 தொடர்களை வென்றுள்ளது.

அணித்தலைவராக மட்டுமின்றி துடுப்பாட்ட வீரராகவும் கோஹ்லி மிரட்டி வருகிறார். இந்நிலையில், கோஹ்லியை Ultimate Captain என மேற்கிந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் பிரையன் லாரா புகழ்ந்துள்ளார்.

AFP

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘விராட் கோஹ்லி Ultimate Captain. அவருடைய செயல்திறன் அடிப்படையில் தலைமைக்கு உதாரணமாக விளங்குகிறார்.

விளையாட்டின் அனைத்து அம்சங்கள் மற்றும் விளையாட்டிற்கு வெளியில் உள்ளதையும் வைத்துதான் நான் இவ்வாறு கூறுகிறேன். அடித்தளம் அமைத்துக் கொடுத்த எம்.எஸ்.டோனியின் பின்புலத்தில் இருந்து சிறப்பாக வந்துள்ளார்.

மேலும், மாறுபட்ட வழியில் யோசிக்கிறார். இந்திய கிரிக்கெட் சரியான திசையில் தலைநிமிர்ந்து செல்கிறது என நினைக்கிறேன். சிறந்த சில வீரர்களால் இது சாத்தியமாக உள்ளது’ என தெரிவித்துள்ளார்.

Reuters

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்