ரவிசாஸ்திரியை மீண்டும் பயிற்சியாளராக நியமித்து சரியா... கங்குலியின் நெத்தியடி பதில்

Report Print Basu in கிரிக்கெட்

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவிசாஸ்திரியை மீண்டும் நியமித்தது தொடர்பில் பிசிசிஐ தலைவராக தேர்வு செய்யப்பட உள்ள சவுரவ் கங்குலி தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

கொல்கத்தாவில் செய்தியாளர்களை சந்தித்த கங்குலி, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவிசாஸ்திரியை மீண்டும் நியமித்து இருக்கக் கூடாது என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

அதேசமயம், பாரபட்சமாக அவரை தேர்வு செய்துவிட்டார்கள் என்றும் நான் நினைக்கவில்லை. அதுகுறித்து உறுதியாக ஏதும் தெரியாது. முரண்பாடுகள் இருந்தபோதே மீண்டும் தலைமைப்பயிற்சியாளராக அவரைத் தேர்வுசெய்துள்ளார்கள் எனத் தெரிவித்தார்.

பிசிசிஐ தலைவராக தேர்வு செய்யப்பட்டபின் ரவி சாஸ்திரியுடன் பேசினார்களா என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த கங்குலி, ஏன் நான் ரவி சாஸ்திரியிடம் பேசக்கூடாது.

இப்போது அவர் என்ன செய்துவிட்டார். முதலில் ஊகத்தின் அடிப்படையில் இந்த கேள்வியை கேட்கிறீர்கள். இரண்டாவது, ஒழுங்கு நெறிமுறை அதிகாரியின் முடிவை நான் பாரபட்சமானது என்று கூறுவது எனக்கு நேர்மையாகத் தெரியவில்லை எனத் தெரிவித்தார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்