அந்த விடயம் எனக்கு சவாலாக இருந்தது! இரட்டை சதம் விளாசி மிரட்டிய ரோஹித்

Report Print Kabilan in கிரிக்கெட்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்டின் முதல் இன்னிங்சில், முதல் முறையாக இரட்டை சதம் விளாசியது குறித்து இந்திய வீரர் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.

ராஞ்சியில் இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. முதலில் ஆடிய இந்திய அணி 497 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.

அதிகபட்சமாக ரோஹித் ஷர்மா 212 ஓட்டங்களும், ரஹானே 115 ஓட்டங்களும் விளாசினர். ரோஹித் ஷர்மாவுக்கு இது முதல் டெஸ்ட் இரட்டை சதம் ஆகும். இந்த சதத்தின் மூலம் அவர் பல்வேறு சாதனைகளை படைத்தார். ஏற்கனவே, ஒருநாள் போட்டியில் மூன்று முறை அவர் இரட்டை சதம் விளாசியுள்ளார்.

இந்நிலையில், டெஸ்ட் இரட்டை சதம் குறித்து ரோஹித் கூறுகையில், ‘தொடக்க ஆட்டக்காரராக மட்டும் சிறப்பாக விளையாட வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. அனைத்து இடங்களிலும் சிறப்பாக விளையாட வேண்டும் என்று தான் நினைப்பேன்.

தற்போது நான் மூன்று டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கியுள்ளேன். இன்னும் நிறைய போட்டிகள் விளையாட வேண்டும். அதனால் என்னுடைய தொடக்க ஆட்டம் குறித்து தற்போது எதுவும் பெரிதாக கூற முடியாது.

AFP

எனினும், 5வது அல்லது 6வது இடத்தில் விளையாடுவதை விட தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவது சவாலாக உள்ளது. ஏனென்றால், 30-40வது ஓவர்களில் களமிறங்குவது சற்று எளிது.

ஆனால், ஆட்டத்தின் தொடக்கத்தில் பந்து ஸ்விங் ஆகும் போது விளையாடுவது மிகவும் கடினம். அந்த சமயத்தில் எந்தப் பந்தை விடுவது, எந்தப் பந்தை அடிப்பது என்று கணிப்பது சற்று சவாலாக இருக்கும்.

இந்தப் போட்டியில் எனக்கு அப்படி ஒரு சவாலான நிலைதான் இருந்தது. இதனால் தான் தொடக்கத்தில் சற்று பொறுமையாக விளையாட ஆரம்பித்தேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers