ஐபிஎல் போட்டிகளில் சுவாரசியத்தை அதிகரிக்க அசத்தலான புதிய முறை! என்ன தெரியுமா?

Report Print Raju Raju in கிரிக்கெட்

ஐபிஎல் போட்டிகளில் சுவாரசியத்தை அதிகப்படுத்த புதிய முறை அமல்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்தாண்டு நடைபெறும் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் ஆட்டத்தின் சுவாரஸ்யத்தையும், விறுவிறுப்பையும் மேலும் அதிகரிக்கும் வகையில் மாற்று வீரரை தேவையான தருணத்தில் களம் இறக்கும் புதிய முறையை அமல்படுத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளது.

அதாவது, ஆட்டத்தின் போக்கை மாற்றும் வகையில் ‘பவர் பிளேயர்’ என்ற முறையை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

ஆடும் 11 பேர் கொண்ட அணியில் இடம் பெறாத வீரர் ஒருவர் ஆட்டத்தின் சூழலுக்கு தேவைப்படும் நிலை ஏற்படும் போது களம் இறங்கி விளையாட முடியும்.

விக்கெட் விழும் போதோ அல்லது ஓவர் முடிவின் போதே அந்த பவர் பிளேயர் களம் காண முடியும். உதாரணமாக கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்படும் நிலையில் அந்த அணியின் டோனி ஆடும் லெவன் அணியில் இடம் பெறாமல் வெளியில் இருக்கும் பட்சத்தில் அவரை பவர் பிளேயராக களம் இறக்க முடியும். பந்து வீச்சிலும் இதேபோல் வீரரை மாற்றம் செய்யலாம்.

இது குறித்து மும்பையில் இன்று நடைபெறும் ஐ.பி.எல். நிர்வாக கவுன்சில் கூட்டத்தில் ஆலோசனை செய்து இறுதி முடிவு எடுக்கப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்