ஸ்டீவ் ஸ்மித் அபாரம்... மைதானத்தில் கொந்தளித்த பாகிஸ்தான் கேப்டன்!

Report Print Vijay Amburore in கிரிக்கெட்

அவுஸ்திரேலிய அணிக்கெதிரான போட்டியின் போது விக்கெட்டுகள் சரிந்துகொண்டே இருந்ததால் பாகிஸ்தான் அணியின் கேப்டன் கோபமடைந்துள்ளார்.

பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதும் இரண்டாவது டி20 போட்டியானது கான்பெரா மைதானத்தில் இன்று நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் நட்சத்திர வீரர்கள் அவுஸ்திரேலிய வீரர்களின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் மளமளவென விக்கெட்டுகளை பறிகொடுக்க ஆரம்பித்தனர்.

இக்கட்டான சூழ்நிலையில் அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் நிதானமாக விளையாடி 38 பந்துகளில் 50 ரன்களை எடுத்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து 150 ரன்களை எடுத்து.

அணி சார்பில் அதிகபட்சமாக 5வது விக்கெட்டுக்கு களமிறங்கிய இப்திகர் அகமது 34 பந்துகளில் 62 ரன்களை குவித்து அசத்தினார்.

இதனையடுத்து 151 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணியில் துவக்க வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினாலும், ஸ்டீவன் ஸ்மித் 80(51) அதிரடி காட்ட ஆரம்பித்தார். இதனால் அந்த அணி 3 விக்கெட்டுகளை மட்டுமே பறிகொடுத்து 18.3 பந்துகளில் வெற்றியை எட்டியது.

போட்டியின் போது ஆரம்பத்திலே 3 விக்கெட்டுகள் சரிந்திருந்ததால் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் மீது அதிக பாரம் வந்து சேர்ந்தது. அசாம் 42 ரன்கள் எடுத்திருந்த போது, எதிர்முனையில் இருந்த ஆசிப் அலி இரண்டாவது ரன்னுக்கு திரும்ப மறுத்துவிட்டார்.

இதனால் அசாம் கோபத்தில் இருக்க, அடுத்த பந்திலே ஆசிப் அலி கேட்ச் கொடுத்து வெளியேறி பெரும் அதிருப்தியை ஏற்படுத்தினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்