இந்தியா-வங்கதேசம் போட்டியில் புதிய அவதாரம் எடுக்கும் டோனி... அதிக எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்தியா மற்றும் வங்கதேசம் அணிகள் மோதும் பகலிரவு டெஸ்ட் போட்டியில் டோனி புதிய அவரதாரம் எடுக்கவுள்ளார்.

இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த உலகக்கோப்பை தொடருக்கு பின் டோனி எந்த வித போட்டிகளிலும் விளையாடாமல் ஓய்வில் இருந்து வருகிறார்.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த தென் ஆப்பிரிக்கா அணிக்கெதிரான டெஸ்ட் தொடரின் போது, டோனி வந்திருந்தார். இதனால் அவர் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் வங்கதேச அணிக்கெதிரான டி20 தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் ரிஷப் பாண்ட்டிற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த டி20 தொடர் முடிந்தவுடன், இரு அணிகளுக்கிடையே டெஸ்ட் போட்டி தொடர் நடைபெறவுள்ளது.

அதில், வரும் 22-ஆம் திகதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பகலிரவு டெஸ்ட் போட்டி பிங்க் பந்தில் நடக்கிறது.

இதுநாள் வரை இந்தியஅணி பகலிரவு டெஸ்ட் போட்டியிலும், பிங்க் பந்திலும் விளையாடியதில்லை. இந்திய அணி பிங்க் பந்தில் விளையாடுவது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் ஆலோசனை வழங்கி வருகின்றனர்.

இதன் காரணமாக இதற்கு முன் இந்திய டெஸ்ட் அணியின் தலைவர்களாக இருந்த சிலரை பிரபல டிவி நிறுவனம் வர்ணனையாளராக அழைத்துள்ளது.

அதில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றிருக்கும் டோனியும் அழைக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் போட்டியின் முதல்நாள் மற்றும 2-வது நாளில் இந்திய அணிக்கு டெஸ்ட் போட்டிகளுக்கு தலைவர்களாக இருந்த அனைவரையும் அழைத்து வர்ணனையாளராக பேச வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

டோனியின் ஆட்டத்தை மைதானத்தில் தான் காண முடியவில்லை, அவரை வர்ணனையாளராக பார்ப்பது ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்பதால் அவர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்