6 சிக்ஸர்.. 6 பவுண்டரி விளாசி ரோகித் அபார ஆட்டம்... வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா

Report Print Basu in கிரிக்கெட்

வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில் இந்தியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்று அசத்தியுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ராஜ்கோட்டில் நடந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்தியா அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. முதல் போட்டியில் தோல்வியடைந்த ரோகித் தலைமையிலான இந்திய அணி, 2வது போட்டியில் கட்டாய வெற்றிப்பெற வேண்டிய நெருக்கடியுடன் களமிறங்கியது.

முதலில் துடுப்பெடுத்தாடிய வங்கதேச அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 153 ஓட்டங்கள் எடுத்தது.

154 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, தலைவர் ரோகித் சர்மாவின் அபார ஆட்டத்தால் 15வது ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை எட்டியது.

சிறப்பாக துடுப்பாடிய ரோகித் 43 பந்துகளில் 6 சிக்ஸர், 6 பவுண்டரி விளாசி 85 ஓட்டங்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடர் 1-1 என்ற வெற்றி கணக்கில் சமனில் உள்ளது.

இரு அணிகள் மோதும் 3வது டி-20 போட்டி எதிர்வரும் நவம்பர் 10ம் திகதி நாக்பூரில் நடைபெறவுள்ளது. இதில் வெற்றிப்பெறும் அணி டி-20 தொடரை கைப்பற்றும்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்