இந்திய கிரிக்கெட் அணியில் சேர தீவிரமாக பயிற்சி எடுக்கும் 3 வயது சிறுவன்! பாராட்டுகளை அள்ளும் வீடியோ

Report Print Raju Raju in கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணியில் சேர்வதற்காக கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபடும் 3 வயது சிறுவனின் வீடியோ வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அனைத்து தரப்பு வயதினரும் ரசிக்கும் விளையாட்டாக கிரிக்கெட் உள்ளது.

கிரிக்கெட் விளையாட்டு சச்சின், சங்ககாரா, ஜெயவர்தனே, கபில்தேவ், ரிக்கி பாண்டிங் போன்ற பல்வேறு ஜாம்பவான்களை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் கிரிக்கெட் விளையாட்டை ரசிக்க மட்டுமில்லாது விளையாடுவதற்கும் வயது ஒரு தடையில்லை என கொல்கத்தாவை சேர்ந்த 3 வயது சிறுவன் நிரூபித்துள்ளான்.

இந்திய கிரிக்கெட் அணியில் சேர வேண்டும் என்பதற்காக தனது 3 வயதில் இருந்து கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டு வருகிறான் சிறுவன் எஸ்.கே.ஷாஹித்.

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை ரோல் மாடலாக கொண்டு விளையாடி வருகிறான் சிறுவன் ஷாஹித்.

ஹெல்மெட், சேஃப் கார்டு, க்ளவுஸ் அணிந்து கிரிக்கெட் விளையாடும் சிறுவன் ஷாஹித்தின் வீடியோ Samsofshd SK என்ற ஃபேஸ்புக் கணக்கில் தினந்தோறும் பதிவிடப்பட்டு வருகிறது.

இந்த சிறுவனது கிரிக்கெட் ஆட்டத்துக்கு சமூக வலைதளங்களில் பிரமாதமான வரவேற்பு கிட்டி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்