தொடரும் அவலநிலை... மீண்டு எழ இளம் இந்திய வீரருக்கு இலங்கை ஜாம்பவான் சங்கக்காரா வழங்கிய அறிவுரை

Report Print Basu in கிரிக்கெட்

இந்திய வீரர் ரிஷப் பந்த துடுப்பாட்டம் மட்டுமின்றி தற்போது விக்கெட் கீப்பிங்கிலும் தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில் இலங்கை ஜாம்பவான் சங்கக்காரா அறிவுரை வழங்கியுள்ளார்.

உலகக் கோப்பை தொடர்ந்து டோனி ஓய்வெடுத்து வரும் நிலையில், ரிஷப் பந்த் அவரின் இடத்தை பிடித்துள்ளார். இளம் வீரரான ரிஷப் பந்த் அந்த இடத்தை தக்க வைத்துக்கொள்வார் என அனைவரும் எதிர்பார்த்தனர்.

இந்நிலையில், மேற்கிந்திய தீவுகள் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான தொடரில் துடுப்பாட்டதில் சொதப்பி வந்த ரிஷப், தற்போது வங்கதேச அணிக்கு எதிராக நடைபெற்று வரும் தொடரில் விக்கெட் கீப்பிங்கிலும் சொதப்பி வருகிறார்.

இதனால், அவர் மீதான விமர்சனங்கள் தொடர்ந்து அதிகரித்துள்ளது. இந்நிலையில் இலங்கை ஜாம்பவானும் தற்போது எம்சிசி கிரிக்கெட் கிளப்பின் முதல் பிரித்தானியர் அல்லாத தலைவராக பொறுப்பேற்றுள்ள குமார் சங்கக்காரா, பந்த்துக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

சங்கக்காரா கூறியதாவது, விக்கெட் கீப்பராக ஸ்டம்புகளுக்குப் பின்னால் நேர்த்தியாக இருப்பது முக்கியம். அது அவருக்கு நம்பிக்கையைத் தரும், அணித்தலைவர் ரீவியூ கேட்பதில் உதவ தனது அழைப்புக்கு முன்னுரிமை அளிப்பார்.

விஷயங்களை எளிமையாக வைத்திப்பது மற்றும் அவரது பலவீனத்தைப் புரிந்துகொள்வது பந்த்துக்கு முக்கியம். விக்கெட் கீப்பராக உத்தியுடன் திட்டமிட்டு செயல்பட வேண்டும். ஏனென்றால் அவரைப் பொறுத்தவரை இப்போது நிலைமையை எளிமையாக வைத்திருக்க வேண்டும், அழுத்தத்தில் இருக்கக்கூடாது.

துடுப்பாட்டம் குறித்து அவருடன் யாராவது பேச வேண்டியது முக்கியம், பந்த்தை அழுத்தத்திலிருந்து விலக்கி சுதந்திரமாக விளையாட விட வேண்டும் என சங்கக்காரா அறிவுரை வழங்கியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்