ஹாட்ரிக் சிக்ஸர் அடித்த பின்பு நான் இதை செய்ய நினைத்தேன்... ரோகித் சர்மாவின் பிளான்

Report Print Santhan in கிரிக்கெட்

வங்கதேச அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் தொடர்ந்து மூன்று சிக்ஸர் அடித்த ரோகித் சர்மா அடுத்த பந்தையும் சிக்ஸட் அடிக்க நினைத்தேன் என்று கூறியுள்ளார்.

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேச அணி, டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.

தற்போது இரு அணிகளுக்கிடையே மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் வங்கதேசமும், 2-வது போட்டியில் இந்திய அணியும் வெற்றி பெற்றது.

இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியின் துவக்க வீரரும், அதிரடி ஆட்டக்காரருமான ரோகித் சர்மா 43 பந்துகளுக்கு 85 ஓட்டங்கள் குவித்தார். இதில் 6 பவுண்டரி 6 சிக்ஸர்கள் அடங்கும்.

அந்த 6 சிக்ஸர்களில், ஒரு ஓவரில் ரோகித்சர்மா ஹாட்ரிக் சிக்ஸர் அடித்தார்.

(Photo: Twitter/ BCCI)

இது குறித்து இந்திய வீரர் சஹாலிடம் ரோகித் கூறுகையில், நான் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்தபோது, அடுத்ததாகவும் 3 சிக்ஸர்கள் அடிக்க முயற்சித்தேன். ஆனால், 4-வது சிக்ஸரைத் தவறவிட்டதும் அடுத்ததாக ஒரு ஓட்டம் எடுக்க முடிவு செய்தேன் என்று கூறினார்.

மேலும் உங்களை போல் நான் என்னுடைய இந்த உடம்பை வைத்து சிக்ஸர் அடிக்க முடியுமா? என்று சஹால் கேட்ட போது, அதற்கு அதெல்லாம் முடியும், சிக்ஸர் அடிப்பதற்கு பவர் தேவையில்லை, சரியான டைமிங்கில் பந்தைத் தூக்கிவிடுவதுதான் முக்கியம் என்று கூறினார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்