ஒரே ஓவரில் 5 சிக்ஸர்... மைதானத்தில் ருத்ரதாண்டவம் ஆடிய வீராங்கனை!

Report Print Vijay Amburore in கிரிக்கெட்

பெண்களுக்கான பிக் பாஷ் லீக் ஆட்டத்தில் நியூசிலாந்தை சேர்ந்த சோஃபி டெவின், ஒரே ஓவரில் 5 பந்துகளை மைதானத்திற்கு வெளியில் அனுப்பி அசத்தியுள்ளார்.

ஆண்களை போலவே பெண்களுக்காக நடத்தப்படும் பிக் பாஷ் லீக் போட்டியானது தற்போது அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது.

கரேன் ரோல்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் 20 ஓவர் போட்டியில் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ் பெண்கள் அணியும், மெல்போர்ன் ஸ்டார்ஸ் பெண்கள் அணியும் நேருக்கு நேர் மோதுகின்றன.

இதில் டாஸ் வென்ற மெல்போர்ன் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அடிலெய்டு அணியின் துவக்க வீரர்கள் சோஃபி டெவின் 85(56) மற்றும் சுசி பேட்ஸ் 36(30) ஆரம்பம் முதலே அதிரடி காட்ட ஆரம்பித்தனர்.

அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை குவித்தது. கடைசிவரை விக்கெட்டை இழக்காமல் மைதானத்தில் நிலைத்து நின்று ஆடிய சோஃபி டெவின், ஆட்டத்தின் கடைசி ஓவரில் எதிரணியை மிரட்ட ஆரம்பித்தார்.

மேட்லைன் பென்னா வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தில் கேட்டி மேக் ஒரு ரன்னுக்கு தட்டிவிட்டு, சோஃபிக்கு வாய்ப்பு கொடுத்தார்.

இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சோஃபி, அடுத்த 5 பந்துகளையும் மைதானத்திற்கு வெளியில் அனுப்பி 30 ரன்களை குவித்தார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்