மலிங்காவுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்த இலங்கை கிரிக்கெட் ஆணையம்

Report Print Basu in கிரிக்கெட்

இலங்கை டி-20 அணிமோசமாக விளையாடி வருவதின் மூலம், அணியால் இனி மலிங்காவின் தலைமையின் கீழ் முன்னேற முடியாது என்று கிரிக்கெட் அதிகாரிகள் அவருக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இலங்கையின் டி -20 அணித்தலைவராக வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா இன்னும் சில நாட்கள் மட்டுமே நீடிப்பார் என கூறப்படுகிறது.

கடந்த மாதம் இலங்கையின் இரண்டாவது நிலை அணி பாகிஸ்தானை டி-20 தொடரில் 3-0 என வைட்வாஷ் செய்தது. இதன் மூலம் 2020 ஆண்டு நடைபெறவுள்ள டி-20 உலகக் கோப்பைக்கு முன் இலங்கைக்கு புதிய நம்பிக்கை பிறந்தது.

ஆனால், கடந்த வாரம் அவுஸ்திரேலியாவில் டி-20 தொடரில் 3-0 என இலங்கை வைட்வாஷ் ஆனதால் தற்போது நம்பிக்கை இழந்துள்ளது.

பாகிஸ்தானில் இலங்கை அணியை மிகச்சிறப்பாக வழிநடத்திய தாசுன் சானகாவின் தலைமைத்துவ திறமை பாராட்டுக்குரியது, மேலும், டி-20 அணித்தலைவர் பதிவியை அவரிடம் ஒப்படைக்குமாறு தேர்வாளர்கள் வலியுறுத்தப்பட்டனர்.

இருப்பினும், கடுமையாக விமர்சிக்கப்பட்ட தேசிய தேர்வுக் குழு மாற்றத்தை எதிர்த்தது மற்றும் மலிங்கா மீது நம்பிக்கை கொண்டிருந்தது. ஆனால் அணியின் செயல்திறன் தொடர்ந்து குறைந்தது.

இதுதொடர்பாக அதிகாரிகள் மலிங்காவுடன் பேசியதாகவும், வரவிருக்கும் மாற்றம் குறித்து அவருக்கு அறிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மலிங்காவின் தலைவர் பதவிக்கு உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லை, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட டி -20 தொடர்களுக்கு அவர் தலைவராக நியமிக்கப்படுவார். இருப்பினும், அவர் தொடர்ந்து அணியை வழிநடத்துவார் என்பதில் எந்த உத்தரவாதமும் இல்லை என கூறப்படுகிறது.

அடுத்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெறும் டி-20 உலகக்கோப்பைக்கு முன்னர் டி -20 களில் இருந்து ஓய்வு பெறுவதாக அச்சுறுத்தியதால் அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்க தேர்வாளர்கள் தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது.

இருப்பினும், இப்போது அணியின் மோசமான செயல்திறன் மற்றும் தசுன் சானகாவின் எழுச்சியைத் தொடர்ந்து, தேர்வாளர்கள் தலைவரை மாற்ற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்