சச்சினின் 30 ஆண்டுகால சாதனையை முறியடித்த 15 வயது வீராங்கனை

Report Print Vijay Amburore in கிரிக்கெட்

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் 15 வயது இளம் வீராங்கனை ஒருவர், ஜாம்பவான் சச்சினின் 30 ஆண்டுகால சாதனையை முறியடித்துள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியானது ஒருநாள் தொடரை 2-1 என்கிற கணக்கில் கைப்பற்றியதையடுத்து, தற்போது டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.

இன்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய பெண்கள் 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய பெண்கள் அணியில் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 46 பந்துகளில் 67 ரன்களும், ஷஃபாலி வர்மா என்கிற 15 வயது வீராங்கனை 49 பந்துகளில் 73 ரன்களும் எடுத்திருந்தனர்.

இவர்கள் இருவர் மட்டும் இணைந்து 143 ரன்களை குவிந்திருந்தனர். ஷஃபாலி வர்மா ஆறு பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் என மைதானத்தின் வெளியே பந்துகளை பறக்கவிட்டார்.

அதோடு அல்லாமல் போட்டியில் சிறப்பாக விளையாடிய ஷஃபாலி வர்மா இளம்வயதிலே அரைசதம் கடந்த வீரர் என்கிற சாதனையை படைத்துள்ளார்.

ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் 16 வயது 285 நாட்களில் தன்னுடைய முதல் சாதனையை படைத்திருந்தார். ஆனால் ஷஃபாலி வர்மா 15 வயது 214 நாட்களில் அரைசதம் அடித்து, சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்