வங்கதேச அணியின் கனவை துவம்சம் ஆக்கிய சாகர்... ஹாட்ரிக் விக்கெட்... ஹாட்ரிக் சிக்ஸர்! இந்தியா அபார வெற்றி

Report Print Santhan in கிரிக்கெட்
395Shares

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி, அங்கு தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.

இதில் இரு அணிகளுக்கிடையே நடைபெற்று முடிந்த இரண்டு டி20 போட்டிகளில் இரு அணிகளும் 1-1 என்று வெற்றி பெற்றிருந்ததால், இன்றைய போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரைக் கைப்பற்றும் என்பதால், மிகுந்த எதிர்பார்ப்புடன் நாக்பூரில் துவங்கியது.

BCCI/Twitter

அதன் படி நாணய சுழற்சியில் வென்ற வங்கதேச அணியின் தலைவர் மெஹ்மதுல்லா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து இந்திய அணிக்கு துவக்க வீரர்களாக வந்த ரோகித் 2 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட்டாகி வெளியேற, இவரை தொடர்ந்து தவான் 19 ஓட்டங்களில் நடையை கட்டியதால், இந்திய அணி தடுமாறியது.

BCCI/Twitter

மூன்றாவது விக்கெட்டிற்கு லோகேஷ் ராகுல் உடன் ஷ்ரேயாஸ் அய்யர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

லோகேஷ் ராகுல் 35 பந்தில் 7 பவுண்டரியுடன் 52 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ராகுல் ஆட்டமிழந்ததும் ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

BCCI/Twitter

அபிப் ஹொசைன் வீசிய 15-வது ஓவரின் முதல் மூன்று பந்துகளைசிக்சருக்கு தூக்கிய, ஷ்ரேயாஸ் அய்யர். 5-வது பந்தில் ஒரு ரன் எடுக்க 27 பந்தில் அரைசதம் அடித்தார்.

தொடர்ந்து விளையாடிய அவர் 33 பந்தில் 3 பவுண்டரி, 5 சிக்சருடன் 62 ஓட்டங்களில் வெளியேற, அடுத்து வந்த ரிஷப் பந்த் 6 ஓட்டங்களில் ஏமாற்றம் அளித்தார். மணிஷ் பாண்டே அதிரடி காட்ட இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 174 ஓட்டங்கள் எடுத்தது.

BCCI/Twitter

மணிஷ் பாண்டே 13 பந்தில் 22 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இதையடுத்து 175 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது.

துவக்க வீரரான லிடன் தாஸ் 9 ஓட்டங்களில் வெளியேற, அடுத்து வந்த செளமியா சர்கார் முதல் பந்திலே ஓட்டம் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.

BCCI/Twitter

இருப்பினும் மற்றொரு துவக்க வீரரான மொகமத் நயிம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த வங்கதேச அணியின் ரன் விகிதம் சீரான வேகத்தில் எகிறியது. ஒரு கட்டத்தில் வங்கதேச அணி 12 ஓவர்களை தாண்டிய போது 100 ஓட்டங்களை தாண்டி வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்ததால், வங்கதேச அணிக்கு அதிக வெற்றி வாய்ப்பு, முதல் முறையாக இந்த தொடரை கைப்பற்றி வங்கதேச அணி சாதனை படைக்கும் என்று கூறப்பட்டது.

BCCI/Twitter

ஆனால் வங்கதேச அணியின் இந்த நினைப்படை, இந்திய வேகப்பந்து வீச்சாளர் சிவம் துபே துவம்சமாக்கினார். சிறப்பாக விளையாடி வங்கதேச அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்று கொண்டிருந்த மொகமத் நயிம்மை 81 ஓட்டங்கள் எடுத்திருந்த போது, துல்லியமான யார்க்கர் மூலம் வெளியேற்றினார்.

அதன் பின் வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் வெளியேற, இறுதியாக வங்கதேச அணி 19.2 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 144 ஓட்டங்கள் எடுத்து 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்று இந்திய அணி கைப்பற்றியது.

மேலும் இப்போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் டிபக் சகார் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியதுடன்,இந்த போட்டியில் மட்டும் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி, வங்கதேச அணியின் கனவை துவம்சம் ஆக்கினார்.மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்