இலங்கை வீரரின் சாதனையை ஊதித் தள்ளிய வீரர்... மகிழ்ச்சியில் டோனி ரசிகர்கள்! வைரலாகும் புகைப்படம்

Report Print Santhan in கிரிக்கெட்

வங்கதேச அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் எடுத்து 6 விக்கெட் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் இலங்கை வீரரின் சாதனையை முறியடித்துள்ளார்.

இந்தியா-வங்கதேச அணிகளுக்கிடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நாக்பூரில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 30 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 2-1 என்று தொடரை கைப்பற்றியது.

இப்போட்டியில் வங்கதேச அணியின் துடுப்பாட்ட வரிசையை, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சகார் கதறவிட்டார். ஹாட்ரிக் விக்கெட் விழ்த்திய இவர், 3.2 ஓவர் வீசி 7 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து, 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதன் மூலம் இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான அஜந்தா மெண்டிசின் சாதனையை முறியடித்துள்ளார். இவர் கடந்த 2012-ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கெதிரான ஆட்டத்தில் 4 ஓவர் வீசி 8 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார்.

நேற்றைய போட்டியில் சாகர் 7 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தியுள்ளதால் இந்த சாதனையை படைத்துள்ளார்.

மேலும் சாகாரை இந்திய அணியின் நட்சத்திர வீரரான டோனி தான் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்கு கொண்டு வந்ததாகவும், அதற்கு முன்பு பூனே அணியில் இருந்த போதும், டோனி தான் அவரை எடுத்ததாகவும், இப்போது அவர் இந்திய அணியில் இருப்பதற்கு காரணமே டோனி தான், அவர் இல்லை என்றால் இப்படி ஒரு வீரர் இந்திய அணிக்கு கிடைத்திருக்கமாட்டார் என்று டோனியுடன் சேர்த்து சாகாருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வரும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்