கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக இரண்டு கிரிக்கெட் வீரர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் சர்வதேச சூதாட்ட புக்கி தற்போது வசமாக சிக்கியுள்ளார்.
முதற்கட்ட விசாரணையில் 2019ம் ஆண்டு நடந்த கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்ட பெலகாவி கிரிகெட் அணியின் உரிமையாளர் அலி என்பவர் வீரர்களை சூதாட்டத்திற்குள் இழுத்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதோடு ஜி.எம்.கவுதம், அப்ரார் காஸி ஆகிய இரண்டு கிரிக்கெட் வீரர்களும் உள்ளூர் போட்டிகளில் மெதுவாக விளையாட 20 லட்சம் ரூபாயை பெற்றது தெரியவந்தது, இருவரும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் சூதாட்டிற்கு மூலகாரணமாக இருந்த புக்கிகள் ஷியாம், ஜுட்டின் ஆகியோரை சி.சி.பி பொலிசார் நேற்று டெல்லியில் கைது செய்தனர்.
இதில் ஷாம் சர்வதேச சூதாட்ட புக்கி என தெரியவந்துள்ளது.