மீண்டும் ஹாட்ரிக் விக்கெட்!... தொடரும் தீபக் சாஹரின் சாதனைகள்

Report Print Fathima Fathima in கிரிக்கெட்

வங்கதேசத்துக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்திய இந்திய அணி வீரரான தீபக் சாஹர் இன்று நடைபெற்ற சையத் முஷ்டாக் அலி டிராபி தொடரில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

வங்கதேசத்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் தன்னுடைய அசத்தலான ஆட்டத்தின் மூலம் சர்வதேச அளவில் கவனம் பெற்றார் தீபக் சாஹர்.

இந்நிலையில் இன்று திருவனந்தபுரத்தில் நடந்த போட்டியில் மீண்டும் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியுள்ளார்.

சையத் முஷ்டாக் அலி டிராபி தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடிவரும் சாஹர், விதர்பா அணிக்கு எதிராக மீண்டும் சாதனை படைத்துள்ளார்.

மழையால் ஆட்டம் 13 ஓவராக குறைக்கப்பட்ட நிலையில், 13வது ஓவரை வீசிய சாஹர், கடைசி மூன்று பந்தில் தொடர்ச்சியாக விக்கெட் வீழ்த்தினார்.

இந்த போட்டியில் 3 ஓவர்கள் வீசி, 18 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்