இலங்கை வீரர் விளக்கம்... அது உண்மையில்லை: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

Report Print Santhan in கிரிக்கெட்

இலங்கை அணியின் அதிரடி ஆட்டக்காரரான தனுஷ்க குணத்திலக்க தன்னைப் பற்றி சமூகவலைத்தளங்களில் வரும் வதந்திகளுக்கும், தன்னுடைய சொந்த வாழ்க்கை குறித்தும் கூறியுள்ளார்.

இலங்கை அணி வீரரான தனுஷ்க குணத்திலக்க பற்றி சமீபகாலமாக சமூகவலைத்தளங்களில் பல தகவல்கள் வெளியாகி வருகின்றனர். அதில் சிலவற்றை மக்கள் உண்மை என்று நம்புவதால், தனுஷ்க குணத்திலக்க அதற்கு தற்போது விளக்கமளித்துள்ளார்.

அதில் மக்கள் எண்ணுவதும், என்னுடைய வாழ்க்கையும் வித்தியாசமானது என்று கூறியுள்ள அவர், என்னை சிலர் அதிகம் கர்வம் கொண்டவன் என்று நினைக்கின்றனர்.

ஆனால் யாராவது என்னிடம் வந்து பேசினால் தான் நான் அப்படிப்பட்டவனா? என்பது தெரியும். இலங்கையில் இருக்கும் பெரும்பாலானோர் கலச்சார விடயங்களில் ஒரு நபர் நேரகாலத்தோடு திருமணம் முடிக்க வேண்டும் என்பது போல், ஒரு சிறந்த வீரராக இருப்பவர் நேரகாலத்தோடு அறைக்குச் சென்று தூங்குபவராக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.

அப்படி இருக்காத போது, தன்னுடைய இயல்புகள் குறித்து இஷ்டத்திற்கு கதைகளை உருவாக்குகின்றனர். இதை எல்லாம் எப்படி என் கிரிக்கெட் வாழ்க்கையோடு தொடர்புட முடியும்.

நான் Bar-க்கு நண்பர்களோடு சென்றால், இளைப்பார மட்டுமே செல்வேன், ஆனால் என்னை அங்கே யாராவது பார்க்கும் போது நான் குடித்து கும்மாளம் போட்டு கிரிக்கெட் ஆட முடியாமல் இருப்பதாக நினைக்கின்றனர்.

ஆனால், கிரிக்கெட் வீரர்களுக்கான yo-yo பரிசோதனையை பாருங்கள். அதில், உடற்தகுதி என்று வரும் போது அணியில் முதல் மூன்று இடங்களுக்குள் வருகின்றேன்.

நான் எப்போதும் Clubbing போவதாக கூறுகின்றனர். ஆனால், அப்படி கிடையாது. கடந்த மூன்று மாதங்கள் நான் கொழும்பில் இல்லையென்று கூறியது உண்மை இல்லை.

எனக்கு வெளியில் செல்ல வேண்டும் என்றால்? நான் காலிக்கு செல்வேன், அங்கே நான் தொடர்ந்தும் செல்லும் பார் ஒன்று உள்ளது.

அங்கே சுற்றுலாப் பயணிகளே அதிகம் இருப்பர். எனவே, என்னை யாரும் அடையாளம் காண முடியாது. ஆனால், நான் கொழும்பில் வெளியில் செல்லும் போது என்னை பலருக்கும் தெரியும். இது சில நேரங்களில் எனக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும். அப்போது என்னால், என்னைப் போன்று இருக்க முடியாது என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...