டோனி போன்று ரன் அவுட் செய்ய நினைத்து திட்டு வாங்கிய இளம் விக்கெட் கீப்பர்... வெளியான வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

இந்தியாவில் நடைபெற்று வரும் உள்ளூர் தொடரில் விக்கெட் கீப்பர் ஒருவர் தேவையில்லாமல் டோனி போன்று ரன் அவுட் செய்ய நினைத்து, அசிங்கப்பட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இந்தியாவில் தற்போது உள்ளூர் தொடரான சையத் முஷ்டாக் அலி டி20 டிராபி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றைய ஆட்டத்தில் குரூப் டி பிரிவில் இருக்கும் மத்தியபிரதேச அணியும், மேகாலயா அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதின.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய மத்தியபிரதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 244 ஓட்டங்கள் குவித்தது.

குறிப்பாக மத்தியபிரதேச அணியின் வீரரான அய்யர் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது, பந்தினை தடுத்துவிட்டு ஒரு ஓட்டம் ஓட நினைத்தார். ஆனால் பந்தானது பீல்டரின் கைகளுக்கு செல்ல பந்தை பிடித்த பீல்டர் விக்கெட் கீப்பரிடம் அடித்தார்.

இதனால் பாதி தூரம் ஓடிய அய்யர் தான் அவுட் தான் என்று பொறுமையாக திரும்பி வந்தார். ஆனால் விக்கெட் கீப்பர் அந்த பந்தை சரியாக பிடித்து ஸ்டம்பில் அடித்திருந்தாலே ரன்அவுட் செய்து இருக்கலாம்.

அதைவிட்டுட்டு டோனியை போன்று பின்நின்று ஸ்டம்பை பார்க்காமலேயே அடிக்கிறேன் என்று பந்தை ஸ்டம்பில் அடிக்க தவறினார்.

மேலும் பந்துக்கும், ஸ்டம்புக்கும் சம்பந்தமே இல்லாமல் பந்து சென்றது. எளிதாக செய்யவேண்டிய ரன்அவுட்டை கோட்டைவிட்டதற்காக சக வீரர்களிடமும் அவர் திட்டு வாங்கினார். அ

வரின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers