இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகினார் ஹரின் பெர்னாண்டோ

Report Print Basu in கிரிக்கெட்

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் புதிய ஜனநாயக கட்சி வேட்பாளர் தோல்வியடைந்த நிலையில் அந்நாட்டு விளையாட்டுத் துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ முக்கிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

2019 ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் சஜித் பிரேமதாச ஜக்கிய தேசியத் கட்சியின் துணைத் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

ஆனால், பல ஆதர்வாளர்கள் சஜித் தலைவர் பதவியை தொடர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மக்கள் ஆணையை மதித்து நான் விளையாட்டு, தொலைத்தொடர்பு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் பதவியில் இருந்து விலகுகிறேன் என ஹரின் பெர்னாண்டோ ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

நான் ஜக்கிய தேசிய கட்சியிலும் எனது பதவிகளில் இருந்து ராஜினாமா செய்கிறேன். எனது பதவிக்காலத்தில் என்னை ஆதரித்த ஒவ்வொருவருக்கும் இத்தருணத்தில் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன், நல்ல பணிகள் தொடரும் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்