ஷாருக்கான் தவறு செய்துவிட்டார்... இப்படி செய்திருக்க கூடாது! அடுத்தாண்டு ஐபிஎல் குறித்து யுவராஜ் சிங்

Report Print Santhan in கிரிக்கெட்

இந்தியாவில் அடுத்தாண்டு நடக்கவுள்ள ஐபிஎல் தொடருக்கான ஏலம் நடைபெறவுள்ளதால், இதற்காக கொல்கத்தா அணி தங்களிடமிருந்த முக்கியமான வீரர்களை விடுத்தத நிலையில், அதில் அவுஸ்திரேலியா வீரர் கிறிஸ் லின்னை விடுவித்தது மிகப் பெரிய தவறு என்று இந்திய அணி வீரர் யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள வீரர்களுக்கான ஏலம், அடுத்த மாதம் நடைபெறவுள்ளது.

இதற்காக அணியில் இருக்கும் வீரர்களை விடுவிப்பது, மற்ற அணிகளிடம் வீரர்களை கொடுத்து வாங்குவது போன்ற அவகாசங்கள் கொடுக்கப்பட்டிருந்தது. அதற்கான கடைசி திகதி கடந்த 14-ஆம் திகதியோடு முடிவடைந்துவிட்டது.

அதன் படி கொல்கத்தா அணி சில வீரர்களை விடுவித்தது, குறிப்பாக அவுஸ்திரேலியாவின் அதிரடி வீரர் கிறிஸ் லின்னையும் விடுத்தது. இது மிகப் பெரிய தவறு, ஷாருக்கான தவறு செய்துவிட்டார் என்று யுவராஜ்சிங் கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், அபுதாபியில் நடைபெற்று வரும் டி10 கிரிக்கெட் தொடரில் லின் மராத்தா அரபியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இதே அணியில் தான் நான் இருக்கிறேன், அவர் இப்போது இருக்கும் பார்மை பார்த்தா, ஐபிஎல் தொடரில் நிச்சயமாக சாதிப்பார் என்றே நினைக்கிறேன்.

ஆனால் அதற்கு கொல்கத்தா அணி முடிவெடுத்துவிட்டது என்று கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்