இந்திய கிரிக்கெட் அணி வீரரை இழிவுப்படுத்தி பேசிய அவுஸ்திரேலிய வீரர்! அவர் கொடுத்த பதிலடி

Report Print Raju Raju in கிரிக்கெட்

இந்திய அணி வீரர் பார்திவ் படேலை ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணி தக்கவைத்து கொண்டது தொடர்பாக அவுஸ்திரேலிய அணி முன்னாள் வீரரின் இகழ்வான பதிவுக்கு படேல் பதிலடி கொடுத்துள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் பெங்களூரு அணிக்காக துடுப்பாட்டம் செய்த பார்திவ் படேல் 373 ஓட்டங்களை குவித்தார்.

அந்த அணி 5 வெற்றிகளுடன் பட்டியலில் இறுதி இடத்தை பிடித்த நிலையில், படேலின் இந்த ஓட்டங்கள் அணிக்கு, ஓரளவிற்கு நல்ல பெயரை கொடுத்திருந்தது. இந்நிலையில், அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்காக பார்திவ் படேலை பெங்களூரு அணி மீண்டும் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

இந்நிலையில் அணியின் இந்த முடிவு குறித்து அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் நிபுணருமான டீன் ஜோன்ஸ் கேள்வி எழுப்பினார்.

அதில், அணியில் இன்னும் பார்திவ் படேலை வைத்திருக்கிறீர்களா என அவர் கேட்டிருந்தார். இதையடுத்து தன்னை இழிவுப்படுத்தி பேசிய டீன் ஜோன்சினுக்கு படேல் பதிலடி கொடுத்துள்ளார்.

பெங்களூர் அணியின் இந்த தேர்வு மூலம் டீன் ஜோன்ஸ் அமைதியான முறையில் தன்னுடைய வர்ணனையை தொடர முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

இதுவரை 139 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள 34 வயதான பார்திவ் படேல், 2,848 ஓட்டங்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்