மீண்டும் களமிறங்கிய இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்கள்! உற்சாகமடைந்த ரசிகர்கள்

Report Print Raju Raju in கிரிக்கெட்

சிங்கப்பூரில் நடந்த கிரிக்கெட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்கள் விளையாடியது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

சிங்கப்பூர் இந்தியர் சங்கத் திடலில் முதன்முறையாக நடத்தப்பட்ட ‘ஐசாஸ் கிண்ண டி10’ போட்டியில் பங்கேற்பதற்காக அந்த கிரிக்கெட் நட்சத்திரங்கள் இங்கு வருகை புரிந்தனர்.

நான்காவது தெற்காசிய புலம்பெயர் மாநாட்டின் மூன்றாவது நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இந்த கிரிக்கெட் போட்டிக்கு தெற்காசிய ஆய்வுக் கழகம் ஏற்பாடு செய்திருந்தது.

இந்தியா, இலங்கை, பங்ளாதேஷ் நாடுகளைப் பிரதிநிதிக்கும் கிரிக்கெட் வீரர்கள் இங்கு விளையாடினர்.

இதில் டிராவிட், முகம்மது அசாருதீன், சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், ஜாகிர் கான் உள்ளிட்ட பல வீரர்களும் பங்கேற்றனர்.

உள்ளூர் வீரர்களுடன் இணைந்து பிரசித்திபெற்ற கிரிக்கெட் நட்சத்திரங்கள் முதன்முறையாக விளையாடியது சுவாரஸ்யமாக இருந்தது. இது சிங்கப்பூர் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.

இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் வினோத் ராய் கூறுகையில், உள்ளூர் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றிருப்பது எங்களுக்கு உற்சாகம் தருகிறது.

எதிர்காலத்தில் இத்தகைய ஆட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டால் வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை கிடைத்துள்ளது என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்