இந்தியா இன்னிங்ஸ் வெற்றி... சரிந்தது வங்கதேசம்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்-ல் தொடர்ந்து முதலிடம்

Report Print Basu in கிரிக்கெட்

வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 46 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது மற்றும் பகல்-இரவு பிங்க் பந்து டெஸ்ட் போட்டி கடந்த நவம்பர் 22ம் திகதி கொல்கத்தாவில் தொடங்கியது. இந்தியாவில் நடைபெற்ற முதல் பகல்-இரவு பிங்க் பந்து டெஸ்ட் போட்டியாக இது வரலாற்றில் இடம்பிடித்தது.

நாணய சுழற்சியில் வென்று முதல் துடுப்பெடுத்தாடிய வங்கதேச அணி 106 ஓட்டங்களுக்கு சுருண்டது. முதல் நாள் முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 174 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

நவம்பர் 23ம் திகதி இரண்டாவது நாள் தொடர்ந்து முதல் இன்னிங்ஸில் விளையாடி இந்திய அணி 9 விக்கெட் இழப்பிற்கு 347 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளர் செய்தது. அணித்தலைவர் கோஹ்லி 136 ஓட்டங்கள் எடுத்தார்.

இரண்டாவது நாள் முடிவில் வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்பிற்கு 152 ஓட்டங்கள் எடுத்திருந்தது. இன்று நவம்பர் 24ம் திகதி இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த வங்கதேச அணி 195 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இதன் மூலம் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 46 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றது. இந்திய அணி தரப்பில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது இந்திய பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கு வழங்கப்பட்டது. மேலும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற வெற்றி கணக்கில் கைப்பற்றி இந்திய சம்பயின் பட்டம் வென்றது.

அதுமட்டுமின்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இதுவரை விளையாடிய 7 போட்டிகளிலும் வெற்றிப்பெற்று 360 புள்ளிகளுடன் தொடர்ந்து இந்தியா முதலிடத்தில் உள்ளது. 116 புள்ளிகளுடன் அவுஸ்திரேலிய இரண்டாவது இடத்தில் உள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்