நியூசிலாந்தில் இன அடிப்படையில் அவமானப் படுத்தப்பட்டேன்... மனம் உருகிய இங்கிலாந்து வீரர் ஆர்ச்சர்

Report Print Basu in கிரிக்கெட்

நியூசிலாந்தில் கிரிக்கெட் போட்டியின் போது இன அடிப்படையில் அவமானப் படுத்தப்பட்டதாக இங்கிலாந்து நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் தெரிவித்துள்ளார்.

2019 உலகக் கோப்பை இங்கிலாந்து அணி வெல்ல முக்கிய காரணமாக திகழ்ந்தவர் ஆர்ச்சர். பார்படாஸில் பிறந்த ஆர்ச்சர், 2015ம் ஆண்டு இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்தார். மேலும், ஐசிசி விதியின் படி உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்காக விளையாட தகுதியும் பெற்றார்.

இந்நிலையில், இங்கிலாந்து அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையே நடந்து முதல் டெஸ்ட் போட்டியில், இன்று நவம்பர் 25ம் திகதி இங்கிலாந்து அணி நியூசிலாந்திடம் இன்னிங்ஸ் தோல்வியடைந்தது.

தோல்விக்கு பின் இங்கிலாந்து நட்சத்திர வீரர் ட்விட்டரில் பதிவிட்டதாவது, இன்று எனது அணியைக் காப்பாற்ற உதவுவதற்காக போராடும் போது, இன அவமதிப்புகளைக் கேட்பது சற்று தொந்தரவாக இருந்தது.

அந்த ஒரு பையனைத் தவிர இந்த வாரம் ரசிர்கள் வியக்க வைக்கும் வகையில் இருந்தனர், இங்கிலாந்தின் பார்மி ஆர்மி வழக்கம் போல் சிறப்பாக இருந்தது என தெரிவித்துள்ளார்.

ஆர்ச்சரின் கூற்றுக்களை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் விசாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்ச்சர் இன அடிப்படையில் அவமானப்படுத்தப்படுவது இது முதன் முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் சிசிடிவி மூலம் விசாரணை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட், ஆர்ச்சரிடம் மன்னிப்பு கோருவதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்