300 ஓட்டங்களுக்கு மேல் குவித்த வார்னர் மைதானத்தில் செய்த செயல்! ஆச்சரியத்தில் மூழ்கிய ரசிகர்கள் வீடியோ

Report Print Santhan in கிரிக்கெட்

பாகிஸ்தான் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 335 ஓட்டங்கள் குவித்த அதிரடி வீரர் டேவிட் வார்னர் தன்னுடைய பேட்டிங் க்ளவுஸ் மற்றும் ஹெல்மட்டை அங்கிருந்த ரசிகர்களுக்கு பரிசாக கொடுத்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி அங்கு மூன்று டி20 மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில் இரு அணிகளுக்கிடையே டி20 தொடர் முடிந்த நிலையில், டெஸ் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

இதையடுத்து கடந்த 29-ஆம் திகதி துவங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட் இழப்பிற்கு 589 ஓட்டங்கள் குவித்தது. இப்போட்டியில் அவுஸ்திரேலியா அணியின் துவக்க வீரரான டேவிட் வார்னர் 335 ஓட்டங்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

300 ஓட்டங்களுக்கு மேல் வார்னர் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருந்ததால், லாரா 400 ஓட்டங்கள் குவித்த வரலாற்று சாதனை முறியடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவுஸ்திரேலியா அணியின் தலைவர் டிம் பெய்ன் டிக்ளர் செய்த்ததால், வார்னரால் அந்த சாதனையை முறியடிக்க முடியவில்லை.

இந்நிலையில் டிக்ளர் செய்த பின் பெளலியன் திரும்பிக் கொண்டிருந்த வார்னர் திடீரென்று தன்னுடைய ஹெல்மட் மற்றும் க்ளவுசை அங்கிருந்த ரசிகர்களுக்கு கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அதை சிறுவன் ஒருவரிடம் கொடுத்ததால், அதை மற்ற ரசிகர்கள் எடுப்பதற்கு சண்டை போட்டு கொண்ட வீடியோ வெளியாகியுள்ளது.

இதற்கு முன்னர்அவுஸ்திரேலியாவின் டான் பிராட்மேன், மார்க் டெய்லர் டெஸ்ட் போட்டியில் அதிகபட்சமாக 334 ஓட்டங்கள் குவிந்திருந்தனர், அவர்களின் சாதனையை வார்னர் முறியடித்துள்ளார். அதே சமயம் மற்றொரு அவுஸ்திரேலியாவின் முன்னாள் வீரரான மேத்யூ ஹைடன் 380 ஓட்டங்கள் குவித்து டெஸ்ட் போட்டியில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரருக்கான வரிசையில் லாராவுக்கு(400 ஓட்டங்கள்) அடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்